விளையாட்டு

பாக். அணிக்கு 151 ரன் இலக்கு

செய்திப்பிரிவு

ஆசியக் கோப்பை டி 20 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற பாக். கேப்டன் அப்ரீடி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்தது.கேப்டன் தினேஷ் சந்திமால் 49 பந்தில், 7 பவுண்டரிகள், 1 சிக்ஸ ருடன் 58 ரன் எடுத்தார். முதல் விக்கெட்டுக்கு அவர் தில்ஷா னுடன் இணைந்து 14.1 ஓவரில் 110 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஜெயசூரியா 4, கபுகேதரா 2, ஷனகா 0 ரன்களில் வெளியேறினர்.

தில்ஷான் 56 பந்தில், 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 75 ரன்னும், சிறிவர்தனா 4 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாக். தரப்பில் முகமது இர்பான் 2 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து 151 ரன்கள் இலக்குடன் பாக். அணி பேட் செய்ய தொடங்கியது.

SCROLL FOR NEXT