லிகா கால்பந்து போட்டியில் செல்டா விகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ்டியானா ரொனால்டோ 4 கோல்களை அடித் தார். இதன்மூலம் இப்போட்டியில் ரியல் மேட்ரிட் அணி 7-1 என்ற கோல்கணக்கில் அபாரமாக வென்றது.
லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மேட்ரிட் அணிக்கும் செல்டா விகோ அணிக்கும் இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த ஆட்டத்தின் இரண் டாவது பாதியில் கிறிஸ்டியானா ரொனால்டோ அடுத்தடுத்து 4 கோல்களை அடித்தார். அவரது ஆவேசமான ஆட்டத்தால் இப்போட்டியில் ரியல் மேட்ரிட் அணி 7-1 என்ற கோல்கணக்கில் வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் ரியல் மேட்ரிட் அணி 3வது இடத்தில் நீடிக்கிறது.
இதன்மூலம் லா லிகா தொடரில் அவர் அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 252-ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த தொடரில் அதிக கோல்களை அடித்துள்ள இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 305 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.