விளையாட்டு

உ.கோ.டி20: நியூஸிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு

செய்திப்பிரிவு

நாக்பூர், உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் முதல் போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்துள்ளார்.

தோனி காசைச் சுண்ட வில்லியம்சன் ‘தலை’என்றார். அவர் கேட்டது கிடைத்தது, உடனடியாக முதலில் பேட் செய்வதாக தெரிவித்தார். பிட்ச் முதலில் பேட் செய்ய சாதகமாக உள்ளது என்றார்.

தோனி கூறும்போது, டாஸ் ஒன்றும் தாக்கம் ஏற்படுத்தாது, இந்த பிட்ச் 2-வது பேட்டிங்கின் போது மந்தமாகி விடாது, என்றார்.

இந்திய அணியில் மாற்றமில்லை, ஆசியக் கோப்பையை வென்ற இறுதிப் போட்டியில் ஆடிய அதே அணிதான் இந்த முதல் போட்டியிலும் ஆடுகிறது. ‘அணியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை’ என்றார் தோனி.

நியூஸிலாந்து அணி: கப்தில், வில்லியம்சன், கொலின் மன்ரோ, ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், கிராண்ட் எலியட், சாண்ட்னர், லூக் ரோங்கி, நேதன் மெக்கல்லம், ஆடம் மில்ன, ஐ.எஸ்.சோதி.

SCROLL FOR NEXT