இங்கிலாந்து அணியினர் | படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

இங்கிலாந்தைக் கட்டுப்படுத்த ஒரு அணியால் மட்டும்தான் முடியும்: மைக்கேல் வான் கணிப்பு

செய்திப்பிரிவு


டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கும் இங்கிலாந்து அணியின் வேகத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அணியால் மட்டுமே முடியும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கணித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியும், குரூப்-2 பிரிவில்இடம்பெற்ற பாகிஸ்தான் அணியும் மட்டும்தான் இதுவரை தோல்விகளைச் சந்திக்காமல் செல்கின்றன. மற்ற அனைத்து அணிகளையும் அடித்து துவம்சம் செய்து அபாரமான வெற்றிகளைப் பெற்றுள்ளன.

இங்கிலாந்து அணி தான் மோதிய மே.இ.தீவுகள், வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல இந்தியா,நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை வென்று பாகிஸ்தான் வலிமையுடன் இருக்கிறது.

இங்கிலாந்து அணியின் அசுரத்தனமான ஃபார்மைத் தடுத்து நிறுத்த பாகிஸ்தான் அணியால் மட்டும்தான் முடியும் என மைக்கேல் வான் கணித்துள்ளார்.

மைக்கேல் வான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ மற்றவர்களுக்கு இதுதான் செய்தி. இங்கிலாந்து அணிதான் சிறந்த அணி, எதிரணியை அடித்து நொறுக்கக்கூடிய அணியாக இருக்கிறது. யார் இ்ங்கிலாந்து அணியை வெற்றி நடையை தடுப்பது. இப்போதுள்ள நிலையில் பாகிஸ்தான் அணியால்மட்டும்தான் முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி ஷார்ஜாவில் நாளை நடக்கும் ஆட்டத்தில் இலங்கை அணியையும், செவ்வாய்கிழமை அபுதாபியில் நடக்கும் ஆட்டத்தில் நமிபியா அணியை பாகிஸ்தானும் எதிர்கொள்கின்றன.

SCROLL FOR NEXT