டிரம்பிள்மேனின் அபாரமான பந்துவீச்சால் அபு தாபியி்யில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நமிபியா
முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 8 வி்க்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்தது.110 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நமிபியா 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சேர்்த்து 4 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நமிபியாவுக்கு கிடைக்கும் 3-வது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் குரூப்-2 பிரிவில் இந்தியா, நியூஸிலாந்து அணிகளைவிட புள்ளிக்கணக்கில் முன்னேறி 2 புள்ளிகளுடன் 0.550 ரன்ரேட்டில் உள்ளது. வரும் 30ம் தேதி நடக்கும் இந்தியா, நியூஸிாலந்து இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணிதான் அடுத்த கட்டமாக புள்ளிப்பட்டியலில் நகரும்.
மிகக்குறைவான ஸ்கோரான 109 ரன்களை 10ஓவர்களில் நேற்று நமிபியா அணி சேஸிங் செய்திருந்தால், ரன்ரேட் அடிப்படையில் 2-வது இடத்தைப் பிடித்திருக்கும். ஆனால், 19ஓவர்வரை எடுத்துக்கொண்டதால் ரன்ரேட் உயரவில்லை.
நமிபியா அணியின் இடதுைக வேகப்பந்துவீச்சாளர் டிரம்ப்பிள்மே போட்டியின் முதல் ஓவர் முதல்பந்து, 3-வது பந்து,4-வது பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி திணறவிட்டார். இந்த தடுமாற்றத்துக்குப்பின் ஸ்காட்லாந்து அணி மீளவே இல்லை. 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய டிரம்ப்பிள்மேன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஸ்காட்லாந்து அணியில் முதல் 3 வீரர்கள் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். கடைசி வரிசையில் களமிறங்கிய மைக்கேல் லீஸ்க்(44), கிறிஸ் கிரீவ்ஸ்(25) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்துப் பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
110 ரன்கள் சேர்தால் வெற்றி எனும் இலக்குடன் நமிபியா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் வில்லியம்ஸ், லிங்கன் நல்ல தொடக்கம் அளித்தனர். லிங்கன் 18 ரன்னிலும் அடுத்துவந்த கிரீன்(9), கேப்டன் எராஸ்மஸ்(4) ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். நிதானமாக ஆடிவந்த வில்லியம்ஸ்(23) ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் நமிபியா தோல்வியைச் செல்கிறதா என்ற கேள்வி எழுந்தது. 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால், டேவிட் வீஸ், ஸ்மித் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். வீக் 16ர ன்னில் ஆட்டமிழந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு, 35ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ப்ரைலிங்(2) ரன்னில் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார். ஸ்மித்32 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 19.1 ஓவர்களில் வின்னிங் சிக்ஸர் அடித்து ஸ்மித் நமிபியா அணியை வெற்றி பெற வைத்தார். ஸ்காட்லாந்து தரப்பில் வீஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.