ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி யில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத் தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து ஆடியது. டாஸில் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்த தொட ரின் மற்ற ஆட்டங்களைப் போலவே நேற்றைய ஆட்டத் திலும் பந்துவீச்சாளர்களின் கையே ஓங்கியிருந்தது.
இதைத்தொடர்ந்து அடித்து ஆடுவதை விட்டுவிட்டு தற்காப்பு ஆட்டத்தில் அந்த அணியின் வீரர்கள் ஈடுபட்டனர். நிதானமாக ஆடியபோதிலும் ஐக்கிய அரபு அணிகளின் விக்கெட்கள் சரிவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. வங்கதேச அணியின் பேட்ஸ்மேன் கள் பலரும் குறைந்த ரன்களில் அவுட் ஆக, ஷய்மான் அன்வர் (43 ரன்கள்) மட்டும் ஓரளவுக்கு பொறுப்பாக ஆடி சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்தார். அவரது பேட்டிங்கால் ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் புவனேஷ் குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத் திடர்ந்து ரோஹித் சர்மாவும், ஷிகர் தவணும் இந்தியாவின் ஆட்டத்தை தொடங்கினர். முதல் 3 ஓவர்கள் நிதானமாக ஆடிய அவர்கள் அதன் பிறகு அடித்து ஆடினர். அணியின் ஸ்கோர் 43-க இருந்தபோது ரோஹித் சர்மா (39 ரன்கள்) ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து ஷிகர் தவணும் (16 ரன்கள்), யுவராஜ் சிங்கும் (25 ரன்கள்) சேர்ந்து இந்திய அணி 10.1 ஓவர்களில் வெற்றி இலக்கை கடக்க உதவினர். இது இந்த தொடரில் இந்திய அணி பெற்றுள்ள நான்காவது வெற்றியாகும்.