விளையாட்டு

கேப்டன் தோனியின் மட்டையை விட கூடுதலாக ரூ.2 கோடி சம்பாதிக்கும் கோலியின் மட்டை

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் மட்டை களத்தில் ரன் குவிப் பதோடு மட்டும் அல்லாமல் கோடிக் கணக்கிலான ரூபாயையும் சம்பாதிக்கிறது. இது தோனியின் மட்டை சம்பாதிப்பதை விட கூடுதலாக ரூ.2 கோடியை பெறுவது தான் சிறப்பம்சம்.

தோனி தனது மட்டையில் ஸ்பார்டன் என்ற ஸ்டிக்கரை ஒட்டி யுள்ளார். இதற்காக தோனிக்கு ரூ.6 கோடி கட்டணத்தை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது. கோலி தனது மட்டையில் எம்ஆர்எப் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார். இதற்காக அவருக்கு கட்டணமாக ரூ.8 கோடி வழங்கப் படுகிறது. சமீபகாலமாக கோலி விளாசும் ரன்னும் தோனியை விட அதிகமாகவே உள்ளது.

தற்போதைய தொடக்க வீரரான ஷிகர் தவணும் எம்ஆர்எப் ஸ்டிக்கர் ஒட்டிய மட்டையையே பயன்படுத்தி வருகிறார். இதற்காக அவர் பெறும் தொகை ரூ.3 கோடி ஆகும்.

சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோர் தங்களது மட்டையில் சியட் நிறுவன ஸ்டிக்கர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு தலா ரூ.3 கோடி கட்டணமாக கிடைக்கிறது. அஜிங்க்ய ரஹானே பயன்படுத்தும் ரெக்ஸ் ஸ்டிக்கருக்காக அவருக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது.

அதேநேரம் விளம்பர வருவாயை பொறுத்தவரை இன்னும் கோலியைவிட தோனி தான் முதலிடத்தில் இருந்து வருகிறார். ஷூ, விளையாட்டு உபகர ணங்கள் என பல நிறுவனங்களும் போட்டி போட்டு தோனியை தங்களது விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றன.

SCROLL FOR NEXT