மகளிர் டி 20 உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் நேற்று நாக்பூரில் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. டாப் ஆர்டர் வீராங்கனைகளான ஹீலி 2, விலானி 0, ஓஸ்போர்ன் 0 ஆகியோர் ஹஸ்பெர்க் சுழலில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த லேனிங் ரன் கணக்கை தொடங்காமல் வெளியேறினார். 4 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பெரி 42, ஜோனாஷென் 23, பிளாக்வெல் 10, மூனி 15 ரன் சேர்க்க ஆஸ்திரேலியா அணி கவுரவமான ஸ்கோரை பெற்றது.
எளிதான இலக்குடன் விளை யாடிய நியூஸிலாந்து 16.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரிஸ்ட் 34, பேட்ஸ் 23 ரன் எடுத்தனர். ஏற்கெனவே இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றதால் நியூஸிலாந்து அணி 6 புள்ளிகளுடன் அரைறுதிக்கு முன்னேறியது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் 26-ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.