விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ்: 3-வது சுற்றில் இந்திய வீரர்கள்

பிடிஐ

உலக சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர், மகளிர் பிரிவில் இந்திய அணி 3வது சுற்றுக்கு முன்னேறியது.

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆடவர் அணி துருக்கியை எதிர்கொண்டது. இதில் இந்தியாவின் சரத் கமல் 11-5, 11-5, 11-7 என்ற கணக்கில் இப்ராஹிமையும், சவுமியாஜித் கோஸ் 11-8, 11-6, 11-7 என்ற கணக்கில் ஜென்ஹே மென்ஜியை யும், அந்தோனி அமல்ராஜ் 11-3, 11-4, 11-6, 11-7 என்ற கணக்கில் அப்துல்லா ஜென்லெரையும் தோற் கடித்தனர். இந்திய ஆடவர் அணி 3வது சுற்றில் நைஜிரியாவை சந்திக்கிறது. மகளிர் பிரிவில் இந்தியா, புயிர்டோ ரிகோவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

-

SCROLL FOR NEXT