விளையாட்டு

எதிரணி வீரர்களுக்குக் கடும் நெருக்கடியை வருண் சக்கரவர்த்தி ஏற்படுத்துவார்: ரெய்னா

செய்திப்பிரிவு

20 -20 உலகக் கோப்பை போட்டியில் எதிரணி வீரர்களுக்குக் கடும் நெருக்கடியை வருண் சக்கரவர்த்தி ஏற்படுத்துவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரெய்னா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டியின் பிராதான ஆட்டங்கள் அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடக்கின்றன. இதில் 24ஆம் தேதி நடக்கும் முதல் பிரதான சுற்றில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.

இதில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தி 20 -20 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாகப் பந்து வீசுவார் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறும்போது, “20 -20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு முக்கியப் பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தி இருப்பார். அமீரக மைதானங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். இதனால் எதிரணி வீரர்களுக்குக் கடும் நெருக்கடியை வருண் ஏற்படுத்துவார். சர்வதேசப் போட்டிகளில் வருணுக்கு அனுபவம் குறைவாக இருந்தாலும் அவர் ஆதிக்கம் செலுத்துவார்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT