உலகக் கோப்பையில் மூன்று முறை கோப்பை வெல்லும் அணிக்கு நிரந்தரமாகவே கோப்பை வழங்கப்படுவது வழக்கம். இதன்படி 1970-ம் ஆண்டில் மூன்றாவது முறையாகக் கோப்பை வென்ற பிரேசில் அணிக்கு ‘ஜூல்ஸ் ரிமேட் கோப்பை’வழங்கப்பட்டது. 1974-ல் உலகக் கோப்பைக்காக இத்தாலியக் கலைஞர் சில்வியோ கஸ்ஸானிகா வடிவமைத்ததுதான் இப்போதைய கோப்பை. முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட இக்கோப்பை 36.5 செ.மீ. உயரமும் ஐந்து கிலோ எடையும் கொண்டது. 2038 வரை நடைபெறும் உலகக் கோப்பையில் வெற்றிபெறும் அணிகளின் பெயர்களைக் கோப்பையில் பொறிக்க முடியும். இக் கோப்பை சர்வதேசக் கால்பந்துக் குழுமத்திடமே (ஃபிஃபா) இருக்கும். வெற்றிபெறும் அணிக்கு தங்க முலாம் பூசப்பட்ட பிரதிதான் வழங்கப்படுகிறது.