ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றிய ருதுராஜ்க்கு அவரது இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸின் தொடக்க வீரர்களாக உள்ள ருதுராஜ், இந்தத் தொடரில் அதிகமான ரன்கள் சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.
16 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் 635 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு சதம், 4 அரை சதம் அடித்துள்ளார். 23 சிக்ஸர்களும், 64 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.
மேலும், மிக இளம் வயதில் ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றிய வீரர் என்ற பெருமைக்கு ருதுராஜ் சொந்தக்காரர் ஆனார்.
இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ்க்கு சீனியர் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஐக்கிய அமீரகத்திலிருந்து தனது சொந்த ஊர் திரும்பிய ருதுராஜ்க்கு அவரது இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது தொடர்பான வீடியோவை சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
2021 ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாகக் கைப்பற்றியுள்ளது.