விளையாட்டு

2015 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது.

2015 உலகக்கோப்பை ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி ஜான் ஹார்ன்டென் இது குறித்துக் கூறியதாவது:

பிப்ரவரி 15ஆம் தேதி அடிலெய்டில் நடைபெறும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

ஆஸ்திரேலியா ஒரு பெரிய பன்முகக் கலாச்சார நாடு. எப்போதுமே நான் இந்தியா, பாகிஸ்தான் விளையாடும் ஆட்டத்தை நேரில் காண்பேன்.

அதுபோலவே இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அவர்கள் சொந்த நாட்டில் இந்தப் போட்டியைப் பார்ப்பது போன்ற சூழலை உருவாக்குவோம்.

உலகின் சிறந்த போட்டித் தொடரான உலகக் கோப்பையை நடத்துகையில் நகரங்களை உயிரோட்டமாகச் செய்ய வேண்டியது எங்கள் கடமை. என்றார் அவர்.

2015, பிப்ரவரி 14ஆம் தேதி தொடக்கப் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியையும், நியூசிலாந்து, இலங்கையையும் எதிர்கொள்கிறது.

SCROLL FOR NEXT