ஆசியக் கோப்பை டி 20 இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக இந்தியா சாம்பி யன் பட்டம் வென்ற நிலையில் டி 20 உலகக் கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவில் ஒவ் வொருவரும் கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பு கின்றனர். மைதானத்தில் ஆடுவதை விட டிவி-யில் பார்க்க கிரிக்கெட் மிக எளிதாகவே இருக்கும். இந்தியா இறுதியில் வென்றது என்றில்லாமல் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி என்பதே பரபரப்பான தலைப்பாக இருக்கும். வெற்றி பெற்றால் இது என்ன பெரிய விஷயம், வென்றுதான் ஆக வேண்டும் என்ற ரீதியில் கருத்து வெளியாகும். தோற்றால் வங்கதேசத்திடம் தோற்கலாமா என்று கேள்விகள் எழும்.
அதாவது வெற்றி பெறுவது இயல்பான ஒன்று அதன் மூலம் முன்னெடுத்துச் செல்ல ஒன்றுமில் லை என்பது போல் இருக்கிறது சில விமர்சனங்களின் தரம்.
சுரேஷ் ரெய்னா அல்லது ரோஹித் சர்மா போன்றவர்கள் முதல் பந்திலிருந்தே பெரிய ஷாட்களை ஆடக்கூடியவர்கள். ஆனால் பின்னால் களமிறங்கும் போது ஆரம்பத்திலேயே பெரிய ஷாட்களை ஆடுவது கடினம்.
முகமது ஷமி அணிக்கு வந்தால் ஆஷிஷ் நெஹ்ரா இடத்தில் மட்டுமே இடம்பெற முடியும். ஆனால் நெஹ்ராவை இப்போதைக்கு நாம் விலக்க முடியாது. பும்ராவை நீக்குவதற்கு வாய்ப்பேயில்லை. ஏனெனில் அவர் புதிய பந்து, பழைய பந்து என்று யார்க்கர்களை நினைத்த போது வீச முடிகிறது. முதலில் ஷமி தனது உடல்தகுதியை பயிற்சிப் போட்டிகளில் நிரூபிக்க வேண்டும்.
டி 20 உலகக்கோப்பைக்கான சரியான பாதையில் நாங்கள் பயணிக்கிறோம். இம்முறை சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் எதிரணியை கட்டுப்படுத்தக் கூடியவர்கள். சுழற்பந்து வீச்சாள ருக்கு எதிராக பெரிய அளவிலான ஷாட்கள் அடிப்பது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.
அவருக்கு பந்து வீச சரியான துணையும் கிடைத்துவிட்டால் அவர்கள் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடியும். இந்த விஷ யத்தில் தரம்வாய்ந்த சுழற் பந்து வீச்சாளர்களை கருத்தில் கொள்ள வேண்டும். பந்து வீச்சில் அவர்கள் காட்டும் மாறுதல்கள் டி 20 உலகக் கோப்பையில் முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு தெரிவித்தார் தோனி.