விளையாட்டு

ட்விட்டரில் என்னை தவறாக டேக் செய்கிறீர்கள்: முன்னாள் முதல்வர் இல்லை என கால்பந்து வீரர் அமரீந்தர் விளக்கம்

செய்திப்பிரிவு

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு பதிலாக என்னை தவறாக ட்விட்டரில் டேக் செய்கிறீர்கள் என இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பரான அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அமரீந்தர் சிங்கை பற்றிய கருத்துகளை ட்விட்டர் மூலம் தெரிவிப்பவர்கள் அவரை டேக் செய்யாமல், இந்திய கால்பந்து விளையாட்டு வீரரான அமரீந்தர் சிங்கை டேக் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கால்பந்து வீரரானஅமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பதிவில், “அன்பிற்குரிய பத்திரிகை நண்பர்களே நான் அமரீந்தர் சிங். இந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பராக உள்ளேன். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் அல்ல. தயவுசெய்து என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் இன்றைய போட்டி

கொல்கத்தா - பஞ்சாப்

நேரம்: இரவு 7.30

இடம்: துபாய்

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

SCROLL FOR NEXT