இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி | கோப்புப்படம் 
விளையாட்டு

‘ஒருநாள் இரவில் அப்படி என்ன அவசர முடிவு’: இந்திய அணி ஆலோசகராக தோனி நியமனம் குறித்து அஜய் ஜடேஜா கேள்வி 

செய்திப்பிரிவு

டி20 உலகக் கோப்ைபக்கான இந்திய அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய்ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனியை பிசிசிஐ நிர்வாகம் நியமித்துள்ளது. பிசிசிஐயின் நடவடிக்கை குறித்து சில கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் மிகச்சிறந்த முடிவு எனப் பாராட்டுகின்றனர், ஆனால், மற்றசிலர் இந்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது குறித்து தனியார் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் வீரர் ஜடேஜா கருத்துத் தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இந்திய அணிக்கு தோனி ஆலோசகார நியமிக்கப்பட்டது எனக்கு புரிந்து கொள்வதில் சாத்தியமற்றதாக இருக்கிறது. இது தொடர்பாக நான் 2 நாட்கள் சிந்தித்தேன். என்னைவிட தோனிக்கு மிகப்பெரிய ரசிகர் யாரும் இருக்க முடியாது. ஆனால், தோனியின் நியமனம் வியப்பாக இருந்தது. தான் கேப்டன் பதவியிலிருந்து விலகும் முன் அடுத்த கேப்டனை நியமித்துச் சென்ற முதல் கேப்டன் தோனி என்று நம்புகிறேன்.

எப்போதெல்லாம் மாற்றம் தேவையோ அப்போது மாற்றத்தை கொண்டு வருபவர் தோனி. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோலி தலைைமயில் இந்திய அணி சிறப்பாகச் செயல்படுகிறது.

அப்படியிருக்கும் போது திடீரென அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது வியப்பளிக்கிறது.இந்திய அணியை நம்பர் ஒன் இடத்துக்கு கொண்டு சென்ற பயி்ற்சியாளர் ரவி சாஸ்திரி இருக்கும்போது, ஒரு நாள் இரவில் அணிக்கு ஆலோசகர் நியமிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? இந்த விஷயம்தான் எனக்குள் வியப்பாக இருக்கிறது, சிந்தனையாக ஓடுகிறது. “

இவ்வாறு ஜடேஜா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT