விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு போட்டி கால்பந்தில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி மற்றும் ஷில்லாங்கில் நடைபெற்று வரும் 12வது தெற் காசிய விளையாட்டு போட்டியில் 9வது நாளான நேற்றும் இந்தியா பல்வேறு பிரிவுகளில் தங்க பதக்கம் வென்றது. ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்தில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆடவருக்கான டிரையத் லானில் இந்தியாவின் திலிப் குமார் பந்தய தூரத்தை 2:02:53 விநாடி களில் கடந்து தங்கம் வென்றார். சகநாட்டை சேர்ந்த குருதத் 2:05:31 விநாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் கைப்பற்றினார். இலங் கையின் நூவன் குமாரா வெண்கல பதக்கம் பெற்றார்.

மகளிர் பிரிவு டிரையத்லானில் இந்தியாவின் பல்லவி ரிட்டிவாலா பந்தய தூரத்தை 1:11:57 விநாடி களில் கடந்து தங்க பதக்கம் கைப் பற்றினார். சகநாட்டை சேர்ந்த பூஜா வெள்ளியும், நேபாளத்தின் ரோஜா வெண்கலமும் வென்றனர்.

துப்பாக்கி சுடுதல்

துப்பாக்கி சுடுதலில் தொடர்ச்சி யாக 4வது நாளாக இந்தியா ஆதிக் கம் செலுத்தியது. 6 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் முழு வதுமாக தங்கம் வென்றது.

ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஓம்ஹார் சிங்கும், மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ரஹி ஷர்னோபாத்தும், 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் அஞ்சும் மோட்கிலும் தங்கம் வென் றனர். இந்த போட்டியின் அணிகள் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்று அசத்தியது.

4 நாட்கள் நடைபெற்றுள்ள துப் பாக்கி சுடுதல் போட்டியில் மட்டும் இந்தியா 18 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கல பதக்கம் கைப்பற்றி யுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் 2 நாட்கள் பல்வேறு பிரிவு களில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெறுகிறது.

கால்பந்து

ஆடவருக்கான கால்பந்து அரை யிறுதியில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந் திய தரப்பில் 21வது நிமிடத்தில் குமாம் உடான்டா சிங்கும், 41வது நிமிடத்தில் மவிஹிமிங்தங்காவும், 64வது நிமிடத்தில் திலிப் ரானேவும் தலா 1 கோல் அடித்தனர். மக ளிர் பிரிவு அரையிறுதியில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது.

ஆடவருக்கான கபடியில் இந்தியா 30-17 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தை தோற் கடித்தது.

மகளிர் பிரிவில் இந்தியா 56-23 என்ற கணக்கில் பாகிஸ் தானையும், 43-11 என்ற கணக்கில் வங்கதேசத்தையும் வீழ்த்தியது. ஹேண்ட்பாலில் மகளிர் பிரிவில் இந்தியா 70-10 என்ற கணக்கில் இலங்கையை வென்றது.

குத்துச்சண்டையில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் தேவேந்திரா சிங், ஷிவா தபா, விகாஸ் கிருஷ் ணன் ஆகியோர் முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்றனர்.

265 பதக்கங்கள்

நேற்று மாலை நிலவரப்படி இந்தியா 155 தங்கம், 84 வெள்ளி, 26 வெண்கலத்துடன் மொத்தம் 265 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. இலங்கை 25 தங்கம், 55 வெள்ளி, 81 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் 8 தங்கம், 26 வெள்ளி, 45 வெண்கலத்துடன் மூன்றாவது இடத்திலும் இருந்தன.

SCROLL FOR NEXT