விளையாட்டு

உலகக்கோப்பை டி20: தென் ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெய்ன் தேர்வு; மோர்கெல் இல்லை

ராமு

உலகக்கோப்பை டி20 தொடருக்கான ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான அணியை தென் ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது.

இந்த சீசனில் தென் ஆப்பிரிக்கா ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 6 டெஸ்ட்களில் டேல் ஸ்டெய்ன் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி அவரை உலகக் கோப்பை டி20 அணியில் தேர்வு செய்துள்ளது.

வேகப்பந்து வீச்சு வரிசையில் கேகிஸோ ரபாதா, கைல் அபாட் உள்ளனர், மோர்னி மோர்கெல், இல்லை, உடற்தகுதி உத்தரவாதம் இல்லாத ஸ்டெய்னைத் தேர்வு செய்து மோர்னி மோர்கெலை விட்டு விட்டனர்.

ஆனால் ஆல்ரவுண்டர்களாக டேவிட் வீஸ மற்றும் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை போன கிறிஸ் மோரிஸ். கடைசியாக இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடிய ஆல்பி மோர்கெலும் உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. இவர் கட்டாக்கில் இந்தியாவுக்கு எதிராக 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

ஸ்பின் வரிசையில் இம்ரான் தாஹிர், ஆரோன் பாங்கிஸோ தேர்வு செய்யப்பட 8 பேட்ஸ்மென்கள் அணியில் உள்ளனர். குவிண்டன் டி காக்கும் இடம்பெற்றுள்ளார்.

டி காக் அணிக்குள் வந்துள்ளதால் தென் ஆப்பிரிக்க மிடில் ஆர்டர் டுபிளெஸ்ஸிஸ், டிவில்லியர்ஸ், பெஹார்டீன், டுமினி, ரைலி ரூசோவ் என்று வலுவாக உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி:

ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், கைல் அபாட், ஆம்லா, ஃபர்ஹான் பெஹார்டீன், குவிண்டன் டி காக், டிவில்லியர்ஸ், டுமினி, இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஆரோன் பாங்கிஸோ, காகிஸோ ரபாதா, ரைலி ரூசோவ், டேல் ஸ்டெய்ன், டேவிட் வீஸ

SCROLL FOR NEXT