அமெரிக்காவில் 8 மாத கர்ப்பிணி ஒருவர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
அலிசியா மொன்டானோ என்ற அந்தப் பெண் அமெரிக்கா சார்பில் 2012 ஒலிம்பிக் போட்டியில் ஏற்கெனவே பங்கேற்றுள்ளார். 28- வயதாகும் அலிசியா 5 முறை அமெரிக்க தேசிய சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.
இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் அலிசியா 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க திட்ட மிட்டுள்ளார். இதற்கு முன்னோட்டமாக கலிபோர்னி யாவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க அவர் முடிவு செய்தார். இதன்படி பந்தய தூரத்தை 2 நிமிடம் 32 விநாடிகளில் அவர் கடந்தார். சாதாரண நிலையில் இதே தூரத்தை கடப்பதைவிட கூடுதலாக வெறும் 35 விநாடிகளையே அவர் எடுத்துக் கொண்டார்.
கர்ப்பிணியான அவர் ஓடு வதைப் பார்த்தவர்கள்தான் பதற்றம் அடைந்தார்களே தவிர அலிசியா எவ்வித பதற்றமும் இன்றி ஓடி முடித்தார். 2011-ம் ஆண்டில் அவருக்கு திருமணமானது. இப்போதுதான் முதல் குழந்தை யைப் பெற இருக்கிறார். டாக்டர் களிடம் ஆலோசனை பெற்ற பிறகே அவர் இந்த பந்தயத் தில் பங்கேற்றார். இது தொடர் பாக கருத்துத் தெரிவித்த அலிசியா, ஓடுவதில் எனக்கு எந்தப் பிரச்சி னையும் ஏற்படவில்லை. கர்ப்பிணி களுக்கு உடற்பயிற்சி தேவை என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதும் எனது நோக்கம் என்றார்.