ஜஸ்பிரித் பும்ரா | கோப்புப்படம் 
விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10 வரிசையில் பும்ரா: தாக்கூர் முன்னேற்றம்

ஏஎன்ஐ


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா டாப்10 வரிசையில் இடம் பிடித்துள்ளார்

இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், ஒலே போப் ஆகியோர் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு பும்ரா எடுத்த 2 முக்கியமான விக்கெட்டுகள், தாக்கூர் இரு இன்னிங்ஸிலும் அடித்த அரைசதங்கள் முக்கியக் காரணமாக அமைந்தன. இதன் காரணமாக தரவரிசையிலும் இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஓவலில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் போப் முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் அடித்ததார். இதனால் தரவரிசையில் 9 இடங்கள் நகர்ந்து 49-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஷர்துல் தாக்கூர் இரு இன்னிங்ஸிலும் அரைசதங்கள் அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இதனால் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தாக்கூர், 59 இடங்கள் நகர்ந்து 79-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர் வரிசையிலும் தாக்கூர் 7 இடங்கள் நகர்ந்து, 49-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா ஓவல் டெஸ்டில் சதம் அடித்தபோதிலும் தரவரிசையி்ல் எந்த மாற்றமும் இல்லாமல் 5-வது இடத்திலேயே நீடிக்கிறார். வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 2 முக்கியமான விக்கெட்டுகளை தனது துல்லியமான யார்கரில் சாய்த்து வெற்றிக்கு காரணமாக அமைந்தார், இதனால், பந்துவீச்சாளர் வரிசையில் 10-வது இடத்திலிருந்து 9-வது இடத்துக்கு பும்ரா முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 7 இடங்கள் முன்னேறி 87-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார். ராபின்ஸன் 3 இடம் நகர்ந்து 33-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

SCROLL FOR NEXT