மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தனது கிரிகெட் பேட்டை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கிறிஸ் கெய்ல், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் இந்தியா வரும் போது எல்லாம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் படங்களை அடிக்கடி பார்ப்பாராம். அவருக்கு பிடித்த படம் ‘ஷான்ஷா' எனவும் கெய்ல் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது கையெழுத்திட்ட பேட்டை அமிதாப் பச்சனுக்கு பரிசாக அளித்துள்ளார் கெய்ல்.
‘ஸ்பார்டன்' கிரிக்கெட் மட்டையை பரிசாக அளித்ததில் பெருமை அடைகிறேன். அவரது படங்கள், ஸ்டைல் என அனைத்தும் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி கெய்ல் டுவிட்டரில்,"ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கு எனது இதற்கு அமிதாப் பச்சன், "கெய்ல், என்ன ஒரு மரியாதை, என்னை பற்றி உங்களுக்கு தெரியும் என நான் நினைக்கவில்லை. நாங்கள் உங்களின் தீவிர ரசிகர்கள்" என்று பதிலளித்துள்ளார். அமிதாப் நன்றி தெரிவித்த நிலையில், விரைவில் உங்களை இந்தியாவில் சந்திக்கிறேன் என பதில் டிவிட் செய்துள்ளார் கெய்ல்.