விளையாட்டு

பிப்.19-ல் பிசிசிஐ செயற்குழு கூட்டம்

பிடிஐ

ஐபிஎல் சூதாட்ட வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை சீரமைக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி சில பரிந்துகளை அளித்தது. ஒருவர் 3 முறைக்கு மேல் பிசிசிஐ நிர்வாகியாக இருக்கக்கூடாது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது. அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பிசிசிஐ நிர்வாகிகளாக இருக்கக்கூடாது ஆகியவை அதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

ஆனால் இந்த பரிந்துரைகளை பிசிசிஐ உடனடியாக அமல் படுத்தவில்லை.

இதையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக வரும் மார்ச் 3ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என பிசிசிஐக்கு கெடு விதித்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பதிலளிப்பதற்கு முன்னதாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களின் கருத்துகளை கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை வரும் 19ம் தேதி கூட்டியுள்ளது பிசிசிஐ.

இந்நிலையில் இந்த கூட்டம் நடைபெறும் அதே நாளில் பிசிசிஐ-யின் செயற்குழு கூட்டமும் நடைபெறும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி காலை 11 மணி அளவில் மும்பையில் பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் செயற்குழுக்கூட்டம் நடை பெறுகிறது. இது வழக்கமாக நடைபெறும் செயற்குழு கூட்டம் தான் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT