விளையாட்டு

ஹாக்கி வீராங்கனைகளுக்கு தலா ரூ.31 லட்சம் பரிசு வழங்கும் ம.பி. அரசு

செய்திப்பிரிவு

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 3-4 என்ற கோல் கணக்கில் போராடி இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது. இந்திய அணியினர் தோல்வியடைந்த போதிலும் கடைசி வரை போராடி மக்களின் மனதை வென்றனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது மகளிர் ஹாக்கி அணியினர் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தோற்றிருக்கலாம், ஆனால் நாட்டு மக்களின் இதயத்தை வென்றனர்.

இந்த அணியில் உள்ள அனைத்து வீராங்கனைகளுக்கும் தலா ரூ.31 லட்சம் வழங்கி கவுரவிக்க முடிவு செய்துள்ளோம். எதிர்காலத்தில் எங்களுடைய மகள்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். இதுபோல தங்கப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித் துள்ளார். - பிடிஐ

SCROLL FOR NEXT