இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி | கோப்புப்படம் 
விளையாட்டு

உலக சாதனை நிகழ்த்துவாரா? ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

செய்திப்பிரிவு

சவுத்டாம்டன் நகரில் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை டிரன்ட்பிரிட்ஜில் தொடங்குகிறது.

கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக ரன் அடிக்கத் திணறிவரும் விராட் கோலி நாளை தொடங்கும் டெஸ்ட் தொடரில் ஃபார்முக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2019-ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி உள்நாட்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உள்ளிட்ட 625 ரன்கள் சேர்த்துள்ளார்.

உள்நாட்டில் சராசரியாக 62 ரன்களை கோலி சேர்த்துள்ளார். அதேசமயம், வெளிநாடுகளில் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 332 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ஒரு சதம்கூட அடிக்கவில்லை. சராசரியாக 25 ரன்கள் சேர்த்துள்ளார்.

2019-ம் ஆண்டு கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில்தான் கடைசியாக விராட் கோலி சதம் அடித்தார். அதன்பின் கோலி சதம் அடிக்கவில்லை. ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக அடுத்துவரும் 5 டெஸ்ட் போட்டிகளில் கோலி ஒரு சதம் அடித்தாலும் உலக சாதனையை நிகழ்த்திவிடுவார், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங்கின் சாதனையையும் தகர்த்துவிடுவார்.

ரிக்கி பாண்டிங் கேப்டனாகப் பதவி வகித்து 324 போட்டிகளில் 41 சர்வதேச சதங்களை ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார். தற்போது விராட் கோலி 201 போட்டிகளில் பங்கேற்று 41 சர்வதேச சதங்களை அடித்து பாண்டிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் பாண்டிங்கின் சாதனையையும் தகர்ப்பது மட்டுமல்லாமல், உலக அளவில் கேப்டனாக இருந்து, அதிகமான சதங்களை அடித்தவர் என்ற பெருமையையும் கோலி பெறுவார்.

SCROLL FOR NEXT