படம் உதவி | ட்விட்டர் 
விளையாட்டு

இந்திய அணியை வீழ்த்தியதற்கு பாராட்டு: இலங்கை அணிக்கு ரூ.75 லட்சம் பரிசு

பிடிஐ


இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றதையடுத்து, இலங்கை அணி்க்கு ரூ. 75 லட்சம் பரிசு வழங்கப்படும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் செய்து தலா 3 ஒருநாள் டி20 போட்டிகளில் விளையாடியது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் 13 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணி இழந்தது.

இதில் 2-வது டி20 ஆட்டம் நடபெறும் முன் இந்திய வீரர்களுக்கு வழக்கமாக எடுக்கப்படும் கொரோனா பரிசோதனையில் குர்னல் பாண்டியாவுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருடன் நெருக்கமாக இருந்த 8 வீரர்ளும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனால், 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில், பிரதான வீ்ரர்கள் இன்றி விளையாடி இந்திய அணி டி20 தொடரை இழந்தது. கடந்த 13 ஆண்டுகளில் இந்திய அணி சர்வதேச அரங்கில் இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை இழப்பது இதுதான் முதல்முறையாகும்.

இந்திய அணியை வீழ்த்திய மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும், இலங்கை வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு ரொக்கப்பரிசை அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை அணியினருக்கு ரூ.75 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இலங்கை கிரிக்ெகட் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ இந்திய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி வீரர்களின் திறமையை இலங்கை வாரியம் உணர்கிறது. பயிற்சியாளர்கள், வீரர்கள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து அவசியமான வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்கள். இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி தொடர்ந்து முன்னேற வேண்டும். இந்த வெற்றியை அங்கீகரி்க்கும் வகையில், இலங்கை அணிக்கு ரூ.75 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT