டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில், டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவி்ல் இந்திய வீரர் சரத் கமல் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவி்ல் டேபிள் டென்னிஸ் போட்டிகள் இன்று நடந்தன. இதில் 2-வது சுற்றில் இந்திய வீரர் சரத் கமலை எதிர்த்து போர்ச்சுகல் வீரர் தியாகோ போலோனியா மோதினார்.
49நிமிடங்கள் நிடித்த இந்த ஆட்டத்தில் போலோனியாவை 2-11, 11-8,11-5, 9-11, 11-6, 11-9 என்ற கேம் கணக்கில் சரத்கமல் வீழ்த்தினார். 3-வது சுற்றில் நடப்பு சாம்பியன் சீனாவின் மா லாங்கை எதிர்கொள்கிறார் சரத் கமல்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தலைசிறந்த வீரராகத் திகழும் சீனாவின் மா லாங், தான் மோதிய பெரும்பாலாந ஆடவர் ஒற்றையர் பிரிவில் பல சாம்பியன் பட்டங்களை வென்று, நடப்பு சாம்பியனாகவும் உள்ளார். ஆதலால் மா லாங்கை வீழ்த்துவது சரத் கமலுக்கு சாதாரணமானதாக இருக்காது, பெரும் சவால் நிறைந்த ஆட்டமாகவே இருக்கக்கூடும்
மகளிர் ஒற்றையருக்கான 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி தோல்வி அடைந்தார். சீனாவின் யூ பூவிடம் 3-11, 3-11, 5-11,5-11 என்ற கணக்கில் 23 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் முகர்ஜி தோல்வி அடைந்தார்.
இன்று பிற்பகலில் 3-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஆஸ்திரியாவின் சோபியா போல்கனோவாவை எதிர்கொள்கிறார்.