விளையாட்டு

சச்சின் சுயசரிதை நூல் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றது

பிடிஐ

முன்னாள் நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’ விற்பனையில் சாதனை படைத்ததற்காக லிம்கா சாதனகள் புத்தகத்தில் இடம்பெற்றது.

நவம்பர் 6, 2014-ல் ஹேச்சட் இந்தியா நிறுவனத்தினால் சச்சின் சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது. இது புதினம் மற்றும் புதினமல்லாத புத்தகங்கள் பிரிவில் 1,50,289 புத்தகங்கள் விற்று சாதனை படைத்துள்ளது.

வெளியிடப்பட்டு விற்பனைக்கு வந்த முதல் தினத்திலேயே சச்சினின் பிளேயிங் டி மை வே என்ற சுயசரிதை நூல் டேன் பிரவுனின் இன்பெர்னோ, வால்டர் ஐசக்சன்னின் ஸ்டீவ் ஜாப்ஸ், ஜே.கே. ரவுலிங்கின் கேஷுவல் வேகன்சி ஆகிய நூல்களின் விற்பனையைத் தூக்கிச் சாப்பிட்டது.

மேலும் சில்லறை விற்பனை மதிப்பிலும் ரூ.13.51 கோடியைத் தொட்டு சாதனையை தன் பக்கம் வைத்துள்ளது சச்சின் சுயசரிதை நூல்.

இந்த நூலை சச்சினுடன் போரியா மஜூம்தார் என்பவரும் சேர்ந்து எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT