விளையாட்டு

16-வது தேசிய அளவிலான வேளாண் பல்கலை போட்டிகள் கோவையில்: 22-ல் தொடக்கம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந் தர் கு.ராமசாமி கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

அகில இந்திய அளவில், வேளாண்மை பல்கலைக்கழகங் களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடைசியாக 15-வது தேசிய அளவிலான விளை யாட்டுப் போட்டிகள் அஸாம் மாநில வேளாண்மைப் பல் கலைக்கழகத்தில் நடைபெற் றது. அதில் ஒட்டுமொத்த விளை யாட்டிலும் தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகம் இரண்டாமிடம் பெற்றது.

தற்போது 16வது தேசிய அளவிலான போட்டிகள் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழக வளாகத்தில் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. போட்டி கள் 26-ம் தேதி வரை நடைபெறுகின்றன.

ஆடவர் பிரிவில் கையுந்து பந்து, கூடைப்பந்து, கபடி, கோ- கோ, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளும், மகளிர் பிரிவில் கையுந்துபந்து, கபடி, இறகுப்பந்து, கோ-கோ, டேபிள் டென்னிஸ், தடகளம் ஆகிய விளையாட்டுகளும் இடம் பெறுகின்றன.

62 பல்கலைக்கழகங்கள்

நாடுமுழுவதும் உள்ள 73 பல் கலைக்கழகங்களில் 62 வேளாண் மைப் பல்கலைக்கழகங்கள் போட்டியில் பங்குபெற பதிவு செய்துள்ளன.

சுமார் 3000 மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க் கிறோம். விளையாட்டுப் போட்டி களுக்காக இங்குள்ள மைதானங் கள் தயார்படுத்தப்பட்டு வருகின் றன. ஒரு சில விளையாட்டுக்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT