விளையாட்டு

மலிங்கா கேப்டன், மேத்யூஸ் அணியில்: இலங்கை டி20 உலகக் கோப்பை அணி அறிவிப்பு

இரா.முத்துக்குமார்

உலகக்கோப்பை மற்றும் ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு மலிங்கா கேப்டன் பொறுப்பு வகிக்கிறார். மேத்யூஸ் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நுவான் குலசேகராவும் அணிக்குத் திரும்பியுள்ளார். இன்று அறிவிக்கப்பட்ட 15 வீரர்கள் கொண்ட இலங்கை அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் இடம்பெற்றுள்ளார்.

முக்கியமாக இந்த அணியில் லாஹிரு திரிமானே, தனுஷ்க குணதிலக ஆகியோர் இடம்பெறவில்லை. லெக் ஸ்பின்னர் வாண்டர்சே, ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஷேஹன் ஜெயசூரியா, வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தாசுன் ஷனகா ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஸ்பின்னில் ஹெராத், சேனநாயக, மிலிந்த சிறீவதனா, ஜெயசூர்யா தேர்வு செய்யப்பட, வேகப்பந்து வீச்சுக்கு மலிங்கா, குலசேகரா, துஷ்மந்த சமீரா, திசர பெரேரா ஆகியோர் கொண்ட வலுவான அணி உள்ளது.

இலங்கை அணி வருமாறு:

லஷித் மலிங்கா (கேப்டன்), ஆஞ்சேலோ மேத்யூஸ் (துணைக் கேப்டன்), தினேஷ் சந்திமால், தில்ஷன், நிரோஷன் டிக்வெல்லா, ஷேகன் ஜெயசூரியா, மிலிந்த சிறீவதனா, தாசுன் ஷனகா, சமரா கபுகேதரா, நுவான் குலசேகரா, துஷ்மந்த் சமீரா, திசர பெரேரா, சசித்ர சேனநாயக, ஹெராத், ஜெஃப்ரி வாண்டர்சே.

SCROLL FOR NEXT