விளையாட்டு

சென்னையின் எப்சி அணியின் துணை பயிற்சியாளராக ஷபிர் பாஷா நியமனம்

பிடிஐ

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி அணியின் துணை பயிற்சியாளராக சையத் ஷபிர் பாஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே பயிற்சியாளராக இருந்த விவேக் நீக்கப்பட்டு அந்த இடத்துக்கு ஷபீர் கொண்டுவரப்பட்டுள்ளார். 43 வயதான ஷபிர், சந்தோஷ் டிராபியில் தமிழக அணிக்காக இரு சீசன்களில் அதிக கோல்கள் அடித்துள்ளார். மேலும் இந்தியன் வங்கி அணிக்காவும் விளையாடி உள்ளார்.

இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 1995ம் ஆண்டு சென்னை யில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தி னார். இறுதிப்போட்டியில் அவர் அடித்த கோலால் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்தது.

ஆசிய கால்பந்து கூட்டமைப் பின் பயிற்சியாளர் உரிமம் பெற் றுள்ள ஷபிர், இந்தியன் வங்கி அணியின் தலைமை பயிற்சியாள ராகவும், தமிழக மற்றும் இந்திய யு 19 அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

"2 சீசன்களில் துணை பயிற்சியாளராக பணியாற்றிய விவேக்கிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம். அதேவேளையில் புதிய துணை பயிற்சியாளராக ஷபீரை வரவேற்கிறோம். அவரது அனுபவத்தால் அணி நலன் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது" என சென்னையின் எப்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவரான விடா தானி தெரிவித்தார்.

ஷபீர் கூறும்போது, "எனக்கு இந்த வாய்ப்பை அளித்த சென்னையின் எப்சி அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது கடின உழைப்பின் மூலம் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெறுவேன்" என்றார்.

SCROLL FOR NEXT