தொடர்ந்து 3-வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்ற ஜோக்கோவிச் | படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

20-வது கிராண்ட்ஸ்லாம்: விம்பிள்டனில் ஹாட்ரிக் சாம்பியன் ஜோகோவிச்: பெடரர், நடால் சாதனை சமன்

பிடிஐ


கிராண்ட்ஸ்லாம்களில் மிகவும் பாரம்பரியமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தைக் செர்பிய வீரர் நோவாக் ஜோக்கோவிச் கைபற்றினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் மாட் பெரட்டினியை வீழ்த்தி இந்த கோப்பையை வென்றார் ஜோக்கோவிச்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோக்கோவிச் தொடர்ந்து 3-வது முறையாகப் பட்டத்தை வென்றுள்ளார், ஒட்டுமொத்தமாக 6-வதுமுறையாக விம்பிள்டனில் பட்டம் வென்றார்.

கிராண்ட்ஸ்லாம்களில் ஆஸ்திரேலிய ஓபனில் 9 முறையும், பிரெஞ்சு ஓபனில் 2 முறையும், யு.எஸ்.ஓபனில் 3 முறையும் என மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம்களை ஜோக்கோவிச் வென்றுள்ளார்.

இதற்கு முன் ஸ்விட்சர்லாந்து வீரர் ஃபெடரல், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் இருவர் 20 கிராண்ட்ஸ்லாம்களை வென்றிருந்தனர், அவர்களின் சாதனையை ஜோக்கோவிச் சமன் செய்துள்ளார்.

கடந்த 1969ம் ஆண்டில் ராட் லேவருக்குப்பின் 52 ஆண்டுகளில் முதல்முறையாக தொடர்ந்து 3 விம்பிள்டன் டென்னிஸ் பட்டங்களையும் செர்பியவீரர் ஜோக்கோவிச் மட்டுமே ைகப்பற்றியுள்ளார். ஆடவர்களிடையே கிராண்ட்ஸ்லாம்களில் 30-வது முறையாக ஜோக்கோவிச் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார், பெடரர் 31 முறை தகுதி பெற்றுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரரும் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் மாட் பெரிட்டினியை எதிர்கொண்டார் ஜோக்கோவிச். 3 மணிநேரம் 24 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பெரிட்டினியை 6-7, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி கோப்பையை வென்றார் ஜோக்கோவிச்.

முதல் செட்டைக் கைப்பற்றவே ஜோக்கோவிச் கடும் போராட்டம் நடத்தினார். பெரிட்டினி முதல் செட்டில் ஜோக்கோவிச்சுக்கு கடும் நெருக்கடி கொடுக்கமே டைபிரேக்கர் முறையில்தான் ஜோக்கோவிச் முதல் செட்டை வென்றார்.

ஆனால், 2-வது மற்றும் 3-வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜோக்கோவிச், தனது வழக்கமான ஆட்டத்தைக் கையாண்டு பெரிட்டினை திணறவிட்டார்.

SCROLL FOR NEXT