விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஹாட்ரிக் வெற்றி

பிடிஐ

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் போட்டி தொடரை 3-0 என முழுமையாக இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.

ராஞ்சியில் நடைபெற்ற கடைசி போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 38.2 ஓவரில் 112 ரன்களுக்கு சுருண்டது. திலானி மண்டேரோ 23 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் தீப்தி சர்மா 9.2 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 29.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

வேதா கிருஷ்ணமூர்த்தி 61, தீப்தி சர்மா 28 ரன் எடுத்தனர். 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

SCROLL FOR NEXT