விளையாட்டு

ஷாகிப் அல் ஹசன் மனைவியை ரசிகர்கள் கேலி செய்தனர்?

செய்திப்பிரிவு

நேற்று இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன், ரசிகர்களுடன் தகராறு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது முறையற்ற செய்கையை அவர் செய்ததாக 3 ஒருநாள் போட்டிகளுக்குத் தடை செய்யப்பட்டிருந்தார்.

நேற்று விஐபி பாக்ஸில் அமர்ந்திருந்த அவரது மனைவியை ரசிகர்கள் சிலர் கேலி செய்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த ஷாகிப் அல் ஹசன் ரசிகர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் உள்ளூர் செய்தித் தாளில் செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி நிஜமுதீன் சவுத்ரி கூறுகையில் இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்தவுடன் இது பற்றி விசாரித்து முடிவு செய்யப்படும் என்றும் இப்போதைக்கு இந்தச் செய்தி மற்றவர்களைப் போல் தனக்கும் கேள்விப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது என்று கூறினார்.

கேப்டன் முஷ்பிகுர் ரஹிமிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்புகையில், தான் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்தியாவுக்கு என்ன இலக்கு என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்ததாகவும், ஷாகிப் தகராறில் ஈடுபட்டது தனக்கும் ஒரு செய்தியாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT