விளையாட்டு

தமிழ்நாடு பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் வீரர்களுக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் சங்கம் சார்பில் மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற விளை யாட்டு வீரர்களை கவுரவிக்கும் விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் சங்கத்தின் தலைவர் ஆர்.மோகன் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கி கவுரவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “எங்கள் சங்கம் சார்பில் பயிற்சி பெற்ற வீரர்கள் மாநில அளவிலான போட்டியில் பல்வேறு பிரிவுகளில் முக்கிய இடங்களை பிடித்துள்ளனர். 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் எஸ்.கிருஷ்ணா, 6 பிரிவுகளில் முதலிடம் பிடித்துள்ளார். எங்கள் சங்கத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் இவ்வாறு வெற்றிபெறுவது இதுவே முதல் முறை. அவர் அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பில்லியர்ட்ஸ் போட்டி யிலும் முதலிடம் பிடித்துள்ளார். அவரது வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இது போன்ற விளையாட்டுகள் பணக் காரர்களின் விளையாட்டாக கருதப்பட்டது. தற்போது குறைந்த வருவாய் பிரிவினரும் விளையாடுகின்றனர்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் பொதுச்செயலர் எஸ்.வைத்திய நாதன், உறுப்பினர் சுனில் மேத்யூ ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் சங்கம் சார்பில் மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்கள் சென்னையில் நேற்று முன்தினம் கவுரவிக்கப்பட்டனர். சங்கத்தின் தலைவர் ஆர்.மோகன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT