ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜனவரி மாதம் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி 20 (எம்சிஎல்) தொடர் நடைபெறுகிறது. இதில் சச்சின், ஷேவக், கங்குலி உள்ளிட்ட ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த டி 20 தொடரில் பங்கேற்கும் லிபரா லேஜண்ட்ஸ் அணியின் அறிமுக விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த அணியின் உரிமையாளராக பூஜா ஜுன்ஜுன்வாலா உள்ளார்.
நிகழ்ச்சியில் அணியின் உடை மற்றும் லோகா அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. விழாவில் கங்கூலி கலந்துகொண்டார். அதேவேளையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சந்திரகாந்த் பண்டிட், கிரண் மோரே விழாவை புறக்கணித்தனர்.