விளையாட்டு

இறுதிப் போட்டியில் ஜடேஜாவை விளையாடவைத்தது தவறு: சஞ்சய் மஞ்சரேக்கர் காட்டம்

செய்திப்பிரிவு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ப்ளேயிங் லெவனில் ஜடேஜாவை விளையாட வைத்தது தவறு என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இந்தியா - நியூஸிலாந்து இடையே நடந்த உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய அணியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்குக் காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் பிளேயிங் லெவனில் ஜடேஜாவை எடுத்து, விளையாட வைத்தது தவறு என்ற தொனியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், விமர்சகருமான சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “வானிலை மோசமாக இருக்கும் சூழலில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் நீங்கள் களம் இறங்குவது என்பது விவாதத்துக்குரியது. ஜடேஜாவை பேட்டிங்குக்காகவே தேர்ந்தெடுத்துள்ளனர். ஜடேஜா தனது பந்துவீச்சுக்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதற்குதான் நான் எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்” என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.

ஜடேஜா இறுதிப் போட்டியில் ஒரு விக்கெட்டையும், முதல் இன்னிங்ஸில் 15 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 16 ரன்களையும் சேர்த்தார் .

SCROLL FOR NEXT