இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணி 12 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
இதில் மொயீன் முனிர் அலி, சாம் ராப்சன், கிறிஸ் ஜோர்டான் என்ற 3 புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் மேட் பிரையர், லியாம் பிளங்கெட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் மீண்டும் அணியில் அழைக்கப்பட்டுள்ளனர்.
மொயீன் அலி வலது கை ஆஃப் ஸ்பின் பவுலர் மற்றும் இடது கை பேட்ஸ்மென், சாம் ராப்சன், இவர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர், இவர் துவக்க வீரராக அலிஸ்டர் குக்குடன் இறங்கவுள்ளார்.
ஆஷஸ் தொடரில் ஓரளவுக்கு போராடி எதிர்த்து ஆடிய இடது கை துவக்க வீரர் கார்பெரி காரணமில்லாமல் தூக்கி எறியப்பட்டுள்ளார்.
அதேபோல் ஆஷஸ் தொடரில் பெரிய ஆல்ரவுண்டராக எழுச்சியடைந்த பென் ஸ்டோக்ஸிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. காரணம் இவர் மணிக்கட்டில் காயமடைந்த பிறகு போதிய பவுலிங் பயிற்சி பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
கிறிஸ் ஜோர்டான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். இவரும் மேற்கிந்திய தீவுகளில் பிறந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்.
கடைசியாக சிட்னியில் ஆடிய இங்கிலாந்து வீரர்களில் 5 பேர் இந்த அணியில் இல்லை. அந்த 5 வீரர்கள்: ஸ்டோக்ஸ், கார்பெரி, கெவின் பீட்டர்சன், ஜான் பேர்ஸ்டோ, ஸ்காட் போர்த்விக், பாய்ட் ரான்கின்.
இங்கிலாந்து அணி வருமாறு:
குக், ஆண்டர்சன், மொயீன் அலி, கேரி பாலன்ஸ், இயன் பெல், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் ஜோர்டான், லியாம் பிளங்கெட், மேட் பிரையர், சாம் ராப்சன், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ்.