பிபா தலைவர் செப் பிளாட்டர், துணைத்தலைவர் பிளாட்டினி ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) தலைமையகம் இயங்கி வருகிறது. செப் பிளாட்டர் தலைவ ராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலககோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடுகளை தேர்வு செய்வதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனால் செப்பிளாட்டருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. எனினும் 5வது முறையாக அவர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் ஊழல் தொடர்பாக பிபா அமைப்பின் நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து செப் பிளாட்டர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
எனினும் புதிய தலைவர் தேர்தல் (பிப்ரவரி மாதம்) நடைபெறும் வரை தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே பிபா ஊழல் தொடர்பாக செப் பிளாட்டர் மீது ஸ்விட்சர்லாந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிபா அமைப்பில் சுதந்திரமாக இயங்கும் நன்னடத்தைக் குழுவின் தீர்ப்பாய கூட்டம் கூடி ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் செப் பிளாட்டர் மற்றும் அவரிடம் இருந்து ரூ. 13 கோடி பெற்ற ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தலைவரும், பிபா துணைத்தலைவருமான பிளாட்டினி, டிக்கெட் ஊழலில் தொடர்புடைய பொதுச்செயலர் ஜெரோம் வால்கே ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நன்னடத்தைக் குழு பிளாட்டர், துணைத் தலைவர் பிளாட்டினி ஆகியோருக்கு 8 ஆண்டுகள் தடைவிதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்தக் காலத்தில் சம்பந்தப்பட்ட வர்கள் கால்பந்து தொடர்பான எவ் வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதற்கிடையே நன்னடத்தைக்குழு நாங்கள் அளித்த ஆதாரங்களை ஆய்வு செய்யவில்லை. அதனால் முதலில் பிபா குழுவில் மேல்முறையீடு செய்வோம். அதன் பிறகு நீதிமன்றத்துக்கு செல்வோம் என பிளாட்டர் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு நீதிமன்றத்துக்கு செல்வோம் என பிளாட்டர் தெரிவித்துள்ளார்.