உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.
நியூஸிலாந்துக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி சவுத்தாம்டன் நகரில் நடக்கிறது. மழை காரணமாக நேற்று முதல் நாள் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், இரண்டாவது நாளான இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.
இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், 6 பேட்ஸ்மேன்கள் என்கிற அமைப்புடன் களமிறங்குகிறது. நியூஸிலாந்து அணி, வலுவான நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியாவுடன் மோதுகிறது.
இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, கில் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர்.
இந்திய அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.