கோவையைச் சேர்ந்த 5 வயது சிறுவன் சிங்கப்பூரில் நடைபெற உள்ள சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை வேலாண்டி பாளை யத்தைச் சேர்ந்தவர் கே.கணேசன். இவரது மகன் ஜி.மித்ரன் (5). கோவையில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. வகுப்பில் பயின்று வருகிறார். கடந்த ஓராண்டாக ஸ்கேட்டிங் விளை யாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று வரும் மித்ரன், மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென் றுள்ளார்.
இவர், கடந்த அக்டோபர் மாதம் நாக்பூரில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென் றார். இதையடுத்து, சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட் டிக்குத் தேர்வாகியுள்ளார்.
ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் மித்ரன் உள்ளார். தற்போது, 7 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் 11 கிமீ தூரத்தை 45 நிமிடங்களில் கடந்தது கின்னஸ் சாதனையாக இருந்துவருகிறது. இந்த சாத னையை முறியடிப்பதற்காக மித்ரன் விண்ணப்பித்துள்ளார்.
லிம்கா நிறுவனத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் அதற் கான நிகழ்வை மேற்கொள்ள இருப்பதாக சிறுவனின் தந்தை கணேசன் தெரிவித்தார்.