சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் விளையாட சென்னை வீரர் ராம்குமாருக்கு வைல்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஜனவரி 4-ம் தேதி தொடங்கவுள்ளது.
இப்போட்டியின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் விளையாட சென்னை வீரர் ராம்குமார் ராமநாதனுக்கு வைல்ட் கார்ட் வழங்கப்பட் டுள்ளது.
இரட்டையர்களுக்கான பிரிவில் அவர் ராம் பாலாஜி யுடன் இணைந்து ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏடிபி தர வரிசையில் ராம் குமார் 248-வது இடத்தில் உள்ளார்.
இப்போட்டியின் இரட்டையர் சுற்றில் விளையாட சோம்தேவ் தேவ்வர்மன், ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோ ருக்கும் வைல்ட் கார்ட் வழங்கப் பட்டுள்ளன.
ஒற்றையர்களுக்கான தகுதிச் சுற்று போட்டிகளில் ஆட சனம் சிங், விஜய் சுந்தர் பிரசாந்த் ஆகியோருக்கு வைல்ட் கார்ட் வழங்கப்பட்டுள்ளன.