இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குஷால் பெரேராவுக்கு கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் தொடரின் போது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பெரேரா உட்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றிருந்த பெரேரா உடனடியாக திரும்ப அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் பெரேரா நான்கு ஆண்டுகள் தடையை சந்திக்க வேண்டும் என்று ஐசிசி கூறியதாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயசிறி ஜெயசேகரா தெரிவித்துள்ளார். மேலும் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யமுடியும் என்று நம்புகிறோம் என்றார்.