விளையாட்டு

முதல் டெஸ்டில் ஆண்டர்சன் விலகல்

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நாளை தொடங்கும் முதல் டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் டர்பன் நகரில் பாக்ஸிங் டே ஆன நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர் சனுக்கு வலது கால் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில் காயம் பெரிய அளவில் இல்லையென் றாலும் வலி இருப்பதால் நாளை தொடங்கும் முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் ஜனவரி 2ம் தேதி கேப்டவுனில் தொடங்கும் 2வது டெஸ்டுக்கு முழு உடல் ததியை ஆண்டர்சன் பெற்றுவிடுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள் ளது. ஆண்டர்சன் விளையாடாத தால் கிறிஸ் வோக்ஸூக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT