பங்களாதேஷில் வரும் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளர். நேற்று வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தி இந்திய இளையோர் அணி சாம்பியன் ஆனது.
இஷான் கிஷண் அணித்தலைவராக நியமிக்கப்பட ரிஷப் பண்ட் துணக் கேப்டனாக செயல்படுவார். இந்த அணியில் சர்பராஸ் கான், அர்மான் ஜாபர், ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அணி விவரம்:
இஷான் கிஷன், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் (தமிழ்நாடு), சர்பராஸ் கான், ரிக்கி பூய், அர்மான் ஜாபர், அவேஷ் கான், அமந்தீப் கேர், அன்மல்பிரீத் சிங், மயங்க் தாகர், ஸீஷான் அன்சாரி, மாஹிபார் லாம்ரோர், ஷுபம் மாவி, கலீத் அகமது, ராகுல் பாத்தம்.