கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் போட்டியில் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மாற்றுத்திறனாளிகள் பங்கேற் கும் ஆண்களுக்கான 5-வது தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி கள் கோவையில் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட 13 மாநில அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டியில் கர்நாடக அணி 25-13, 25-9 என்ற புள்ளிக் கணக்கில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற கர்நாடக அணிக்கு சுழற்கோப்பை யும், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.