தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் காம்ப்டன் எடுத்த அரை சதத்தால் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்திருந்தது. காம்ப்டன் 63 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 5 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி, காம்ப்டன் (85 ரன்கள்), பேர்ஸ்டா (41 ரன்கள்), ஸ்டூவர்ட் பிராட் (32 ரன்கள்) ஆகியோரின் உதவியால் சரிவில் இருந்து மீண்டு முதல் இன்னிங்ஸில் 303 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணியில் வான் சைல் (0), ஆம்லா (7), ஏ.பி.டிவில்லியர்ஸ் (49 ரன்கள்), டூபிளெஸ்ஸி (2 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் 50 ஓவர்களின் இறுதியில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்திருந்தது.