ஐசிசி நிர்வாகத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர ஐசிசியை மிரட்டியதாக பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் தெரிவித்தார்.
அதாவது இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாட்டு வாரியங்கள் ஐசிசி நிர்வாகத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது.
இதனைச் சாதிக்க ஐசிசி-யை மிரட்டியதாக பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் தெரிவித்தார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்திய விளையாட்டுத்துறை பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் 37வது ஆண்டுக் கூட்டத்திற்கு முக்கிய விருந்தாளியாகக் கலந்து கொண்ட சஞ்சய் படேல் இந்த உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.
"இதற்காக ஊடகங்கள் எங்களை சாடின. ஐசிசி வருவாயில் பெருமளவு பங்களிப்பு செய்யும் இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லையெனில் இரண்டாவது ஐசிசி-யைத் துவங்க வேண்டி வரும் என்று ஐசிசியிடம் தெரிவித்தோம்.
இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் பிறகே ஐசிசி நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்க ஒப்புக் கொண்டது.
இந்த மாத இறுதியில் ஐசிசி-யில் இந்தியா தலைமையிடம் வகிக்கும். ஏனெனில் சினிவாசன் ஐசிசி சேர்மனாகப் பொறுப்பேற்கவுள்ளார். இதற்கு உச்ச நீதிமன்றத் தடை ஒன்றுமில்லை. ஆகவே நாங்கள் இருவரும் மெல்பர்ன் செல்கிறோம்.
ஐசிசி வருவாயில் இந்தியாவின் பங்களிப்பு 68 முதல் 73% ஆகும். ஆனால் அதில் இந்தியாவுக்குக் கிடைப்பது 3 அல்லது 4 விழுக்காடு வருவாயே. இந்த புதிய நிர்வாகத்தின் கீழ் பிசிசிஐ-யிற்கு 24% பங்கு கிடைக்கும்” என்றார்.