முன்னாள் வீரர்கள் டபிள்யூ.வி.ராமன், நரேந்திர கிர்வானி, டி.ஏ.சேகர் ஆகியோர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்னர்.
டபிள்யூ.வி.ராமன் பேட்டிங் பயிற்சியாளராகவும், டி.ஏ.சேகர் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், கிர்வானி சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ இணைச்செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளர்களுக்கான தேர்வுக்காக அகாடமியின் இயக்குநர் திலிப் வெங்சர்க்கார் நேர்முகத்தேர்வு நடத்தி இந்த 3 பேரையும் தேர்வு செய்துள்ளார்.