3 நாடுகள் பங்கேற்ற 19 வயதுக்குட் பட்டோருக்கான ஒருநாள் போட்டி தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.
கொழும்பில் நடைபெற்ற இந்த தொடரில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 47.2 ஓவரில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட் டுகளையும் இழந்தது. எளிதான இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 33.5 ஓவரில் 5 விக்கெட் இழப் புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. வாஷிங்டன் சுந்தர் 56 ரன் எடுத்தார்.