விளையாட்டு

ஜார்கண்ட் அணிக்காக களமிறங்கும் தோனி

பிடிஐ

நாளை (வியாழக்கிழமை) தொடங்கும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்காக ஜார்கண்ட் அணிக்குக் களமிறங்குகிறார் இந்திய ஒருநாள் கேப்டன் தோனி.

தோனி கடைசியாக 2007-ல் ஜார்கண்ட் அணிக்காக உள்நாட்டுப் போட்டியில் ஆடினார்.

இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டித் தொடருக்கான வருண் ஆரோன் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட ஜார்கண்ட் அணியில் தோனியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிராக ஜார்கண்ட் தனது முதல் போட்டியில் மோதுகிறது. பிரிவு பி-யில் ஜார்கண்ட் அணியுடன் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ரயில்வேஸ், கேரளா, ஹரியாணா, குஜராத் ஆகிய அணிகள் உள்ளன.

ஜார்கண்ட் அணி வருமாறு:

வருண் ஆரோன் (கேப்டன்), ஆனந்த் சிங், அங்கிட் தபஸ், குமார் தியோபிராட், தோனி, சிவ் கவுதம், இசாங்க் ஜக்கி, ஜஸ்கரன் சிங், கவுஷல் சிங், மொனு குமார், ஷாபாஸ் நதீம், ராகுல் ஷுக்லா, சோனு சிங், சுமித் குமார் (விக்கெட் கீப்பர்), சவுரவ் திவாரி.

SCROLL FOR NEXT